வடக்கில் நெற்பயிர்ச் செய்கையில் வேகமாக பரவும் நோய் தொடர்பான விசேட கலந்துரையாடல்(Photos)
வட மாகாண ரீதியில் நெற்பயிர்ச் செய்கையில் வேகமாக பரவி வரும் பாரிய நோய் தாக்கமான 'வெண் முதுகு தாவரத்தத்தியின்' தாக்கம் தொடர்பாக மன்னாரில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று(15.12.2023) காலை மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
துரித நடவடிக்கைகள்
இதன் போது யாழ் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பும், கிளிநொச்சி மாவட்டத்தில் 800 ஹெக்டெயர் நிலப்பரப்பும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 650 ஹெக்டெயர் நிலப்பரப்பும், வவுனியா மாவட்டத்தில் 700 ஹெக்டெயர் நிலப் பரப்புமாக வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளதாக வட பிராந்திய விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி நிலைய உதவி பணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
மன்னாரை பொறுத்தவரையில் மிக குறுகிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை
கட்டுப்படுத்த விவசாயிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கலந்துரையாடல் இடம் பெற்ற போதும் நோய் தாக்கம் குறித்து ஆராயப்பட்ட விடையங்களை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தெரியப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பிரதேச செயலாளர்கள் , விவசாய திணைக்கள பிரதி நிதிகள் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள பணியாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
