முல்லைத்தீவில் இணையவழி கற்றல் செயற்பாடு தொடர்பிலான விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கான இணையவழி கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் இன்று காலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று காரணமாக பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் கல்வியை இழந்து வருகின்ற நிலையில் பல்வேறு இணையவழி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டாலும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் இன்றும் கல்வியைத் தொடரமுடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசாங்கத்தினால் மாணவர்கள் இணையவழி கல்வியைத் தொடர்வதற்கு ஏற்ற வகையில் கிராமங்களில் கற்கை நிலையங்களை அமைத்து மாணவர்கள் இணையவழி கல்வியைத் தொடர்வதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களினதும் பிரதேச செயலாளர்கள் துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களின் வலயக்கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் பதவி நிலை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த செயற்றிட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது இதில் உள்ள குறைபாடுகள் சவால்கள் என்பன தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இணைய வசதிகள் இல்லாத இடங்களில் இணைய வசதியை ஏற்படுத்துவது பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
