முல்லைத்தீவில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸாரால் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி தொடர்பான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று(18.01.2024) இடம்பெற்றுள்ளது.
தற்காலத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, போதைப்பொருள் பாவனையால் இளம் சமுதாயத்தினர் தம் எதிர் காலத்தையை இழந்து விடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
போதை ஒழிப்பு நடவடிக்கை
இதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கர்ணண் குடியிருப்பு பகுதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க அப்பகுதி மக்களுக்கும் , புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் உள்ளிடட்ட குழுவினருக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாகவும், அதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இந்த கலந்துரையாடலின் போது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் எந்த நேரத்திலும் போதை ஒழிப்பு தொடர்பான விடயங்களை அறியப்படுத்துமாறும், அதற்காக தாம் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதில் கர்ணண் குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தினர், இளைஞர்கள், பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN |



Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri