சாணக்கியனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு விவசாய அமைப்புக்கள் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இன்று (22.09.2022) காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
உரப்பற்றாக்குறை காரணமாக நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
நெற் செய்கைக்கு தேவையான உரம்
அத்துடன், நெற் செய்கைக்கு தேவையான உரத்தினை அரசாங்கம் வழங்கும் வரையில், நெற்செய்கையில் ஈடுபடப்போவதில்லை.
குறிப்பாக விவசாய அமைச்சர் தங்களிடம் தெரிவித்த கருத்துக்களில் தங்களுக்கு
நம்பிக்கையில்லை
மழையினை நம்பி ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கரிலும், 80 ஆயிரம் ஏக்கர் நீர்பாசனங்களையும் நம்பி தாங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இரா.சாணக்கியனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இரா.சாணக்கியனின் பிறந்தநாளினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கேக் ஒன்றினையும் வெட்டியிருந்தனர்.
இதேவேளை, இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலிலும், மாலை எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் நடைபெறும் கலந்துரையாடலிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளார்.





கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
