இலங்கையின் 74வது சுதந்திரதின அனுஷ்டிப்பு குறித்து மன்னாரில் விசேட கலந்துரையாடல் (Photos)
இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வினை மன்னார் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாக முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(24) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் குறித்த முன்னாயத்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது கடந்த சில வருடங்கள் கோவிட் தொற்று காரணமாகச் சுதந்திர தின நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட அளவு அதிகாரிகளுடன் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
தற்போது கோவிட் தொற்றின் தாக்கம் சிறிதளவு குறைவடைந்து இருக்கும் நிலையில் இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வை மிகவும் சிறப்பாக நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அன்றையதினம் (4) காலை மன்னார் பாலத்தடியில் இருந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் பாடசாலை மாணவர்கள் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் உடன் ஆரம்பமாகி மன்னார் மாவட்ட செயலகத்தில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக மன்னார் பாலத்தடியில் கடற்கரை பகுதியில் பாரிய சிரமதானம் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் மன்னார் மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர்கள்
மன்னார் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் , பாதுகாப்புத் துறையினர் மற்றும்
முப்படையினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
