விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு - ஜி.எல்.பீரிஸ்
மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றனவா என்பதை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த அறிக்கை மிகவும் பெறுமதி வாய்ந்தது. அதனை விடக் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் குறித்த பல அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதினாறு பேரை விடுத்துள்ளோம். மேலும் பலரை விடுவிப்பது குறித்து ஆராய்வதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே சர்வதேசத்துடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. அதை விட இவ்வனைத்து செயற்பாடுகளும் ஜனநாயக கொள்கைக்கேற்பவே செயல்படுத்தப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நாங்கள் பரந்த ஜனநாயகத்திற்கான கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.