புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை: பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை
நாடு முழுவதும் காணப்படும் நிலைமைகளின் அடிப்படையில், சட்டம், ஒழுங்களை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் குற்றங்களை தடுப்பதற்காக ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக நபர்களை வன்முறைகளில் ஈடுபடுவதற்காகவும் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் தூண்டி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இதனால், தேவையற்ற வகையில் நபர்கள் ஒன்று கூடுவதை தடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
ஒன்று கூடி மேற்கொள்ளும் வன்முறை செயல்கள், குற்றங்களை தடுக்க உச்சப்பட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் தேவையான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தும் ஆலோசனையையும் நடைமுறைப்படுத்தி, குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தடுக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் இந்த உத்தரவு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள், மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் உட்பட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

தம்பதியாய் வந்த ஜேர்மன் பெண் - இந்திய இளைஞருக்கு சோதனை! உயிரை காப்பாற்றி கொள்ள ஓடிய பரிதாபம்.. வீடியோ News Lankasri
