மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கான விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மேல் மாகாணத்தில் நேற்றுக் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மதியம் 3 மணியிலிருந்து மாலை 5 மணிவரையும் 1,475 பொலிஸார் இணைந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 23193 பேர் சோதனைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளதுடன் 6324 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 823 பொது இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முகக்கவசம் அணியாது வீதிகளில் பயணித்த 4351 பேருக்கு முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
918 போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 3328 மோட்டார் சைக்கிள்களும், 3777 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்களில் பயணித்த 11340 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத 3334 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam