தேர்தல்கள் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சுக்கு விடுத்துள்ள கோரிக்கை
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (31) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல். ரத்நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி செயலாளர்
“பொலிஸ்மா அதிபரை நியமிக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை, அதற்கு தேவையான பணிகளை செய்ய அதிகாரம் உள்ள ஜனாதிபதியிடம் கேட்பதுதான் நாங்கள் செய்ய முடியும்.
அதன்படி, ஜனாதிபதி செயலாளரிடம் அந்த கோரிக்கையை விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று தீர்மானித்தது.
பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் நேற்று காலை கோரிக்கை விடுத்தோம்.
அதன்படி நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலாளரிடமிருந்து எமக்கு பதில் கிடைத்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தலின் பாதுகாப்பிற்கு தேவையான சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளரினால் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
