முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் சிறப்பு அதிகாரம்!

Sri Lanka Police Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Anti-Govt Protest
By Benat Jul 23, 2022 04:58 PM GMT
Report

பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் எந்தவொரு ஒன்று கூடலையும், ஆர்ப்பாட்டத்தையும் கலைக்க சிறப்பு அதிகாரம் , அவசர காலசட்ட விதிமுறைகள் ஊடாக பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அசங்க கரவிட்ட இதனை தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் சிறப்பு அதிகாரங்கள் 

முப்படையினருக்கும் பொலிஸாருக்கும்  சிறப்பு அதிகாரம்! | Special Authority For The Three Forces

கடந்த ஜூலை 17 ஆம் திகதி பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு  அதன் கீழான விதிகள் வர்த்தமானி ஊடாக பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி அவசரகாலச் சட்டங்கள் பொது அத்தியாவசிய சேவைகள், நுழைவு உரிமை, தேடுதல் மற்றும் கைது செய்யும் உரிமை, குற்றங்கள் மற்றும் தண்டனைகள், விசாரணைகள் மற்றும் சோதனைகள் மற்றும் இதர விபரங்கள் தொடர்பான ஏழு பகுதிகள் பிரகடனத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.

அதில் 7 ஆம் பிரிவின் கீழ் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்குள் பொலிஸாரும் முப்படையினரும் உள் வாங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது கடமைகளை இடையூறின்றி, தடங்கல்கள் இன்றி முன்னெடுத்துச் செல்ல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.


எவரேனும் இடையூறு ஏற்படுத்துவாறாயினின் அவருக்கு எதிராக சட்ட மா அதிபரின் ஆலோசனையுடன் மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்க ஏற்பாடுகள் உள்ளன.

அவ்வாறான ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரது அசையும் அசையா சொத்துக்களை அரச உடமையாக்கவும் அவசரகால விதிமுறைகள் ஊடாக இயலுமை உள்ளது. குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள அவசர கால சட்ட விதிமுறைகளுக்கு அமைய, சோதனை செய்தல், கைது செய்தல் தடுத்து வைத்தல் அதிகாரங்கள் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

தண்டனை சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள உடல் சார் குற்றங்கள், அக்கோவையில் 427 ஆம் அத்தியாயம் முதல் 446 ஆம் அத்தியாயம் வரை குறிப்பிடப்பட்டுள்ள அச்சுறுத்தல் விடுத்தல், அத்து மீறல் தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரும் இராணுவத்தினரும் தமது அதிகாரங்களை பயன்படுத்த முடியும்.

பொலிஸ் மா அதிபருக்கான அதிகாரம் 

முப்படையினருக்கும் பொலிஸாருக்கும்  சிறப்பு அதிகாரம்! | Special Authority For The Three Forces

அத்துடன், நாடளாவிய ரீதியில் அல்லது பிரதேச மட்டத்தில் தேவை ஏற்படும் போது பொலிஸ் ஊரடங்கை நடைமுறைப்படுத்தும்  அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு இந்த அவசரகால சட்ட விதிகள் ஊடாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

இது விஷேட நிலைமையாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதனை மீறி நடந்துகொள்வோர் தொடர்பில் பொலிஸார் முப்படையினர் தமது அதிகாரங்களை பயன்படுத்தலாம்.

அவசரகால சட்ட விதிமுறைகளின் 5 ஆவது பிரிவின் பிரகாரம் குற்றங்கள், தண்டனை என்பன விபரிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கைகளின் போது உயிர்ச் சேதங்கள் ஏற்படுமாயின் அதனை குற்றவியல் சட்டத்தின் கீழான தற்பாதுகாப்பின் போதான மரணமாக கருதி செயற்பட ஏற்பாடுகள் உள்ளன. இதனைவிட சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பில் செயற்படவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன.

விசாரணை அதிகாரங்களைப் பொருத்தவரை ஒருவரை கைது செய்து 24 மணி நேரத்தில் மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டியது சாதாரண சட்ட விதிமுறையாகும். எனினும் அவசரகால சட்டத்தின் கீழ் ஒருவரை 72 மணி நேரம் வரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல்  செய்யாமல் விசாரிக்கும் உரிமை பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு உள்ளது.

அத்துடன் 3 நாட்களில் விசாரணைகளை முடித்து சந்தேக நபரை முன்னிலைப்படுத்த முடியாவிட்டால், அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சந்தேக நபர் ஒருவரை மன்றில் முன்னிலைப்படுத்தாது 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒருவரின் வீடு, வர்த்தக நிலையம், தங்குமிடத்துக்குள் நுழைந்து அல்லது அது சார்ந்து அச்சுறுத்தல் விடுப்பதும் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

பொது வீதிகள், ரயில் தண்டவாளங்கள், பாலங்கள் உள்ளிட்டவைக்கு சேதம் விளைவிப்பதும் அவசரகால சட்டத்தின் கீழான குற்றங்களாகும்.

ஏதேனும் ஒருவர் இவ்வாறான குற்றங்கள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அத்தகவலை வெளிப்படுத்தாமல் இருப்பதும் குற்றமாகும். அவசரகால சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கோ அல்லது அப்பகுதி கிராமசேவகருக்கோ அறிவிக்க முடியும்.

அதே போல, பொது அமைதியை பேணும் நோக்கில், ஒன்று கூடல்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றை கலைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண சட்டத்தில் உள்ள அதிகாரங்களை விட விஷேடமாக இவ்வதிகாரங்கள் அவசரகால சட்டம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது என்பதை பொது மக்கள் நினைவில் கொண்டு செயற்பட வேண்டும்  என தெரிவித்தார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்

9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US