தூய்மையான இலங்கை திட்டத்தில் நீதித்துறையின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம்
தூய்மையான இலங்கை திட்டத்தில் இலக்குகளை நோக்கி சரியான முறையில் நகரவேண்டுமானால் நீதித்துறையின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் சார்பு காரணங்களுக்காக வழங்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா சுட்டிக்காட்டியபோதே மேற்கண்ட கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய வருடத்தில் நடவடிக்கை
மேலும், நாட்டின் நீதித்துறையில் பல்வேறு வழிகளில் செயற்படும் ஊழல்வாதிகளுக்கு எதிராக புதிய வருடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதாக சரத் நந்த சில்வா கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அமைப்பின் அதிகாரிகள் குறித்தும், தரப்பட்ட பக்கச்சார்பான முடிவுகள் குறித்தும், துறைசார் நிபுணர்கள் மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பது சட்ட நிபுணர்களின் கருத்து எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |