துபாய்-கொழும்பு இடையே கூடுதல் சேவைகளை வழங்க எமிரேட்ஸ் எதிர்பார்ப்பு
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், துபாய்- கொழும்பு இடையே கூடுதல் விமான சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளது.
அதன் பிரகாரம் நாளை (02.01.2025) முதல் கொழும்பு மற்றும் துபாய் இடையே கூடுதல் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது
சுற்றுலாப் பயணிகளின் வருகை
இதற்கென புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விமானமானது, 30 வீதம் கூடுதலான இருக்கை கொள்ளளவை கொண்டுள்ளது

2025இல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் இலங்கையின் எதிர்பார்ப்புகளுக்குத் துணைபுரியும் வகையில் இவ்வாறான கூடுதல் விமான சேவைகளை வழங்கவுள்ளதாக எமிரேட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஜனவரி 02ம் திகதி தொடக்கம் 31 மார்ச் 2025 வரை வாரத்தில் ஆறு முறை துபாய் - கொழும்பு இடையே விமான சேவைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri