மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை பரிதாபமாக உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna), மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது ஊரெழு கிழக்கு ஊரெழு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் கிருபரஞ்சன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார்.
இதன்போது அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு மயக்கடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சடலம் மீது உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
