சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய தூதரகம் அறிக்கை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தூதரக உதவி
அதற்கமைய வார நாட்களில் தூதரக சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, மாத இறுதியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, பொதுமக்களுக்கு தூதரக உதவியை வழங்குவதற்காக அதிகாரி ஒருவரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கு அணுகலையும் வசதியையும் மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட தூதரக சேவை நேரங்கள்
ஞாயிறு முதல் வியாழன் வரை: காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை: பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
சிறப்பு வெள்ளிக்கிழமை அமர்வுகளின் போது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கூடுதல் செயலாக்க நேரம் தேவைப்படும் சேவைகள் பின்னர் ஒரு திகதியில் வழங்கப்படும் என்றும் தூதரகம் மேலும் கூறியுள்ளது.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri