சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் விசேட அறிவிப்பு

Sri Lanka Mobile Phones
By Amal Jan 28, 2025 02:31 AM GMT
Report

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தில் பதிவுசெய்யப்படாத தொலைதொடர்பு சாதனங்களை அவை செயல்பட அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) பதிவு தேவைப்படும் கத்திரியக்க அதிர்வெண்ணை (RF) உமிழும் சாதனங்களை, இன்று (28) முதல் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தில் (TRCSL) பதிவு செய்யப்படவேண்டும் இல்லையேல், அவை செயல்பட அனுமதிக்கப்படாது என்று ஆணையகத்தின் பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் அறிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசிகள், கம்பி தொடர்பற்ற வலையமைப்புகள், ட்ரோன்கள் மற்றும் ரேடார் மற்றும் பல்வேறு தொழில்துறை மற்றும் மருத்துவ பயன்பாடுகள் உட்பட கத்திரியக்க அலைகளின் மின்காந்த ஆற்றல் (EME) உமிழும் சாதனங்கள் சட்டப்பூர்வமாக செயல்பட வேண்டுமானால், அவை பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பதவி விலகல் பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்களின் சூழ்ச்சியா! அனந்தி பகிரங்கம்

பதவி விலகல் பின்னணியில் இராணுவ புலனாய்வாளர்களின் சூழ்ச்சியா! அனந்தி பகிரங்கம்

சரியான அனுமதி

இந்த உத்தரவுக்கு இணங்க, பயனர்கள் தொடர்புடைய மாதிரி எண்ணை வழங்குவதன் மூலம் சரியான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் விசேட அறிவிப்பு | Special Announcement Regarding Imei

இந்த புதிய திட்டத்தின் கீழ் உயர்தர, சான்றளிக்கப்பட்ட மின்னணு சாதனங்களை உறுதி செய்வதை ஆணையகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களை வாங்குவதால் எழும் பல சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ஆணையக பணிப்பாளர் கூறியுள்ளார்.

இந்த முயற்சி, இலங்கையில் சட்டவிரோத இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், கைகளில் எடுத்துச் செல்லும் மொபைல் சாதன கண்காணிப்பை ஒழுங்குபடுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் கிடைக்கும் கணிசமான எண்ணிக்கையிலான மின்னணு சாதனங்கள் ஆணையகத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

அத்தகைய சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதால் அரசாங்கத்திற்கு கணிசமான வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

என் இனமே என் சனமே உன்னை உனக்கே தெரிகிறதா..!

என் இனமே என் சனமே உன்னை உனக்கே தெரிகிறதா..!

சட்ட நடவடிக்கை 

எனவே, சட்டவிரோத வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதும், பதிவு செய்யப்படாத மின்னணு சாதனங்களை நுகர்வோருக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்வதைத் தடுப்பதும், தமது ஆணையகத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் விசேட அறிவிப்பு | Special Announcement Regarding Imei

இதேவேளை இந்த மாத இறுதிக்குள் பதிவு செய்யப்பட்ட மொபைல் சாதனங்களை அடையாளம் காண, தமது ஆணையகம் ஒரு தானியங்கி அமைப்பை செயல்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் கொண்டு வரும் மின்னணு சாதனங்கள், புதிய அமைப்பால் பாதிக்கப்பட மாட்டாது. ஒருவர், IMEI-இயக்கப்பட்ட RF-உமிழும் சாதனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்தால் அல்லது கொண்டு வந்தால், அவற்றை, ஆணையகத்தின் இணைய அமைப்பு மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்தத் தேவை, தொலைத்தொடர்பு இயக்குனர் வலையமைப்புகளுடன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள IMEI-இயக்கப்பட்ட RF-உமிழும் சாதனங்களுக்குப் பொருந்தாது.

காலி சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய குழு

காலி சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய குழு

15 இலக்க எண்

IMEI என்பது ஒவ்வொரு தொலைபேசிக்கும் ஒதுக்கப்படும் ஒரு தனித்துவமான 15 இலக்க எண்ணாகும், இது பொதுவாக, மின்கலம் அகற்றப்படும் போது சாதனத்திற்குள் காணப்படும்.

சர்வதேச மொபைல் உபகரண அடையாளமான (IMEI) தொடர்பில் விசேட அறிவிப்பு | Special Announcement Regarding Imei

இது கையடக்க தொலைபேசியின் கீபோட்டில் *#06# ஐ உள்ளிடுவதன் மூலம் இது தொலைபேசித் திரையிலும் காட்டப்படும்.

IMEI எண், ஒரு மொபைல் சாதனத்தின் சந்தைப்படுத்தல் பெயர் மற்றும் உற்பத்தியாளரை தனித்துவமாக அடையாளம் காட்டுகிறது.

இதேவேளை, கையடக்க தொலைபேசியின் IMEI எண்ணைச் சரிபார்க்க விரும்பும் பயனர்கள், கீழே காட்டப்பட்டுள்ள வடிவத்தில் 1909 க்கு ஒரு குறுஞ்செய்தியை (SMS) அனுப்பலாம்.

“IMEI [இடைவெளி] 15 இலக்க IMEI எண்கள்.”

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US