கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பம்:கல்வி அமைச்சர் விசேட அறிவிப்பு
அடுத்த வருடம் முதல் செயற்பாடுகளுடன் கூடிய ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, பாடசாலையின் முதலாம் வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பம்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் இருந்து கல்வி மாற்றத்தின் சகாப்தம் ஆரம்பிக்கும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 13000 பெண் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.
இதற்கு பிரிட்டிஷ் கவுன்சிலும் மற்ற நிறுவனங்களும் உதவி செய்து வருவதுடன் தேவையான வேலைப் புத்தகம் உருவாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்பருவத்திற்கான வேலைத்திட்டமும் அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.”என தெரிவித்துள்ளார்.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam