ஆசிரியர் சேவையில் நிபுணத்துவம் பெற்றவர்களை பணிக்கு அமர்ந்துவது தொடர்பில் வெளியான தகவல்
எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு நிபுணத்துவம் பெற்றவர்களை பணியமர்த்தும் முறை மாற்றப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட விவாதத்தின் கலந்துகொண்டு நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், வரி அதிகரிப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவம், பொறியியல் மற்றும் தகவல் தொழிநுட்பத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள்
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு 30 வீத வரி விதிப்பது நியாயமானதல்ல எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் தயாசிறி ஜயசேகர, வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தனர்.