“மன்னார் மாவட்டத்தில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் உள்ளார்களா என்பதை கண்டறிய விசேட நடவடிக்கை“ (VIDEO)

People Mannar Dengue Omicgron
By Ashik Dec 08, 2021 08:46 AM GMT
Report

மன்னார் மாவட்டம் உள்ளடங்கலாக வடக்கில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா என்பதைக் கண்டறிய பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று(8) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (7) புதிதாக மேலும் 46 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 29 பேர் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்கி இருந்து அயலில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற மாணவர்களாகவும், பல்கலைக்கழக மாணவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது தங்கியிருந்த விடுதியின் ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இவர்களுடன் சேர்த்து டிசம்பர் மாதம் 7 நாட்களில் 118 கோவிட் தொற்றாளர்களும், இவ்வருடம் 3041 தொற்றாளர்களும், மாவட்டத்தில் தற்போது வரை 3058 தொற்றாளர்களும் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 29 கோவிட் மரணம் நிகழ்ந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் தற்போது டெங்கு தீவிரமாகப் பரவி வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி பெற்ற 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 3வது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.

எனினும் குறித்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு காட்டப்படுகின்ற ஆர்வம் முதல் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளும் போது காட்டப்பட்ட ஆர்வத்தை விடக் குறைவாகக் காணப்படுகின்றது.

எனவே 60 வயதிற்கு மேற்பட்ட பைஸர் மற்றும் சினோபாம் ஆகிய தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் தமது 3 மாதங்களைப் பூர்த்தி செய்தவர்கள் தமது 3வது தடுப்பூசியை விரைவாகச் செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றேன்.

தற்போது பண்டிகைக் காலம் என்பதால் மக்கள் அதிகமாக நடமாடித் திரிகின்ற நிலையில் மக்கள் சுகாதார வழி முறைகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பாக உலகளாவிய ரீதியாக புதிய அச்சுறுத்தலாக வரக்கூடும் என எதிர் பார்க்கப்படுகின்ற ஒமிக்ரோன் திரிபு இலங்கையிலும் ஒருவருக்கு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், குறித்த திரிபு இலங்கையிலும் பரவக்கூடிய சூழ்நிலையில்,மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் நடமாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மன்னார் மாவட்டம் உள்ளடங்கலாக வடக்கில் ஒமிக்ரோன் திரிவுடையவர்கள் உள்ளார்களா? என்பதைக் கண்டறிய இன்று(8) தொடக்கம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறி ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும்.

அதன் முடிவுகளிலிருந்து புதிதாக ஒமிக்ரோன் திரிபுடைய தொற்றாளர்கள் இருக்கின்றார்களா? என்பது தொடர்பில் கண்டறிய முடியும். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பனங்கட்டுகொட்டு, பெரிய கடை, சின்னக்கடை, மூர்வீதி, மற்றும் பேசாலை பகுதிகளில் அதிக அளவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 83 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் நவம்பர் மாதம் 26 டெங்கு நோயாளர்களும் டிசம்பர் மாதம் 7 நாட்களில் 27 டெங்கு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுளம்பு பெருகக் கூடிய இடங்களை அடையாளம் கண்டு, அழிப்பது, அகற்றுவது அல்லது சுத்திகரிப்பது மற்றும் நுளம்பின் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாப்பது கட்டாயமானதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US