இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை: பொது பாதுகாப்பு அமைச்சர்
பாதாள உலகத்தை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர், மேல் மற்றும் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப் படை, பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முழுமையாக ஒடுக்குமாறு இதன்போது பொலிஸ் பிரிவுகளுக்கு அமைச்சர் டிரன் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகத்தை முழுமையாக ஒடுக்குமாறு அமைச்சர்
பணிப்புரை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் அண்மை காலங்களில் அதிகளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகின.
இதற்கு போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பாதாள உலக அடக்கு முறைகளில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் மற்றும்
நேரடியாக போதைப்பொருள் தடுப்பு நவடிக்கைகளில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதுமே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 19 மணி நேரம் முன்

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
