காதலர் தினத்தை முன்னிட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கை
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுற்றாடல் அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் அதேவேளையில், பெப்ரவரி 14 ஆம் திகதி 'காதலுக்கு ஒரு மரம்' என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது.
குறித்த மரம் நடும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுக்க கிறீன் யுவர்சிட்டி, இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் மற்றும் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து காலை 9.00 மணிக்கு நடத்துகின்றன.
கடந்த ஆண்டும் காதலர் தினத்திற்காக இதேபோன்ற மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அன்றைய தினம் 50,000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்aபாடுகள் செய்யப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri