அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று தீர்மானம்
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளது.
எதிர்க்கட்சிகளினால் அருண ஜயசேகரவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்பட உள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூட உள்ளது.
இதன் போது எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகர் தனது நிலைப்பட்டை வெளிப்படுத்த உள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க முடியாது என சபாநாயகர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணான வகையில் சபாநாயகர் செயற்பட்டால் அவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 19 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
