கலாநிதி பட்டத்தால் அநுர அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
சபாநாயகர் அசோக ரங்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூகத்தில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது.
அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்த சமூக சந்தேகத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளது.
சபாநாயகர் அசோக ரங்வல பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, அவரைப் பற்றிய அறிமுகங்களில் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டது.
சபாநாயகரான பதவியேற்ற இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் கலாநிதி அசோக ரங்வல என்று பதிவு செய்யப்பட்டது.
கலாநிதி பட்டம்
ஆனால், அவருக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் இல்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால் சமூகத்தில் விவாதம் உருவானது.
இதேவேளை, நாடாளுமன்ற இணையத்தளத்தில் அவரது பெயருக்கு முன்னால் உள்ள கலாநிதி என்ற குறியீடு நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது குறித்து சபாநாயகர் அசோக ரங்வலவிடம் கேட்டபோது, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் மீது மக்கள் கடும் அதிருப்பதி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
