ஊடகங்களுக்குப் பதிலளிக்க மறுக்கும் சபாநாயகர்
நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்து வருவதாக பல்வேறு ஊடகவியலாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்றம் அல்லது அரசாங்கம் உள்ளிட்ட எந்தவொரு விடயம் தொடர்பாகவும் ஊடகங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இருந்தும் தவிர்ந்து கொள்வதை சபாநாயகர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
செயலாளர்
அத்துடன், தன்னிடம் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு தனது செயலாளர் பதிலளிப்பார் என்றும், அவரைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் ஊடகவியலாளர்கள் பலருக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகளுக்கு உங்கள் செயலாளர் பதில் தருவாரா என்று ஊடகவியலாளர்கள் திருப்பிக் கேட்டதற்கு, என்னுடைய செயலாளர் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பார் என்று பொறுப்பற்ற முறையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பதிலளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




