மகிந்தவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பு.. நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பு என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பா என்பது குறித்து இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய தீர்மானம்
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், "தற்போதுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் குறித்து நாங்கள் ஒரு பொதுவான முடிவை எடுத்துள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு சபையில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பிலான புலனாய்வு அறிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிக்கைகள் ஆராயப்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




