வீதிகளில் உள்ள கழிவுகளை மக்கள் அகற்ற முடியாது! மானிப்பாய் தவிசாளர் பதிலடி
வீதிகளில் உள்ள கழிவுகளை மக்கள் அகற்ற முடியாது என மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.யசீதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான கூட்டம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜசீதன் தலைமையில் இன்று(27.03.2026) இடம்பெற்றது.
இதன்போது கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட, மரணச் சடங்கின்போது வீதியில் வெடி கொழுத்துதல் தொடர்பான தீர்மானம் குறித்து சபையில் பேசப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெடி கொழுத்துவது தொடர்பிலான தீர்மானம்
இது குறித்து உறுப்பினர் பகீரதன் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த கூட்டத்தில் வெடி கொழுத்துவதற்கு எதிராக தீர்மானம் எடுக்கப்படவில்லை. அது கூட்டத்தில் வெறுமனே பேசப்பட்டது மாத்திரமே. ஆனால் அது தீர்மானமாக எடுக்கப்பட்டதாக வெளியே பேசப்பட்டது.
மேலும் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் எமது வட்டாரத்தில் மரணச் சடங்கு ஒன்று இடம்பெற்றது. அந்த மரணச் சடங்கின்போது வீதியில் வெடி கொழுத்துவதற்காக, பிரதேச சபையில் பேசப்பட்டது போலவே சபைக்கு கட்டணமாக 10 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டது.

அந்த 10 ஆயிரம் ரூபாவானது, வெடி கொழுத்தும் குறித்த பகுதியை சுத்தம் செய்வதற்காகவே அறவிடப்படுகிறது. ஆனால் குறித்த மரணச் சடங்கு இடம்பெற்று 15 நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை அந்த இடம் சுத்தம் செய்யப்படவில்லை. மேலும், குறித்த பகுதியை தாங்களே சுத்தம் செய்வதாக மக்கள் கூறினால் அந்த 10 ஆயிரம் கட்டணம் செலுத்தாமல் விடலாமா? என்றார்.
அதற்கு பதிலளித்த தவிசாளர் கூறுகையில்,
வீதியில் உள்ள குப்பைகளை அகற்றவோ, வேறு செயற்பாடுகளை செய்யவோ மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆகையால் நாங்கள் தான் அவற்றை செய்ய வேண்டும். நான் இந்தியாவில் இருந்ததால் குறித்த விடயம் தொடர்பாக எனக்கு தெரியவில்லை. எனவே குறித்த பகுதியை விரைவில் சுத்தம் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam