சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு! ஈரான் போரினால் ரஷ்யாவோடு மீண்டும் இணையும் இந்தியா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஈரான் மீதான போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கம் காரணமாக, இந்தியா தனது எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவுடனான பழைய நட்பை மீண்டும் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த மோதலால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் கிடைக்கும் மசகு எண்ணெய் விநியோகம் 70 சதவீதம் வரை சரிந்துள்ளது.
சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு
இதனால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதைத் தவிர்க்க, ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் அதிகப்படியான மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி இடையிலான சமீபத்திய உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில், ஈரானிய வான்வெளி மற்றும் கடல்வழிப் பாதைகளைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகள் வழியாக எரிபொருளைக் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை (INSTC) வலுப்படுத்துவதன் மூலம் ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதிகளில் இருந்து எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த இந்தியா முயன்று வருகிறது.
அமெரிக்காவின் போர்க்காலக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளுக்கு மத்தியிலும், தனது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க இந்தியா எடுத்துள்ள இந்த இராஜதந்திர முடிவு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam