கட்சி தலைவர்களின் சிறப்பு மெய்நிகர் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு
கட்சி தலைவர்களின் சிறப்பு மெய்நிகர் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஜூம் (zoom) மூலம் நடைபெறவுள்ளது என சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (11) நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்தே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமைக் கூட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், அது நிச்சயமற்றது எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
| தேசிய பிரச்சினையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்! மெய்நிகர் கட்சி கூட்டத்தை கோரும் ஜீவன் தொண்டமான்! |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri