தேசிய பிரச்சினையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்! மெய்நிகர் கட்சி கூட்டத்தை கோரும் ஜீவன் தொண்டமான்!
இலங்கையின் தற்போதைய நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு மெய்நிகர் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தனது டுவிட்டர் பதிவில், இந்த முன்மொழிவை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளது.
எனவே, தீங்கு அல்லது அழிவு ஏற்படும் முன் நிலைமையை நிவர்த்தி செய்ய ஒரு மெய்நிகர் கட்சி தலைவர்கள் கூட்டம் தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
இதேவேளை ஜீவன் தொண்டமானின் அழைப்பு, வரவேற்கத்தக்கது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே பாதுகாப்பு காரணமாக இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெறவிருந்த கட்சி தலைவர்களின் கூட்டம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் நேற்று அறிவித்திருந்த நிலையிலேயே ஜீவன் தொண்டமானின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 4 மணி நேரம் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan