நாடாளுமன்ற பெண் பணியாளர்களுக்கு சபாநாயகர் வழங்கிய உறுதிமொழி!
நாடாளுமன்றில் பெண் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றிற்குள் பெண் பணியாளர்களுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் அது குறித்து நேரடியாக தமக்கு அறிவிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
கடந்த காலங்களில் நாடாளுமன்றில் பெண்களுக்கு சில அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய சிலர் பணி நீக்கப்பட்டதுடன் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தாம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அது குறித்து தமக்கு நேரடியாகவே முறைப்பாடு செய்ய முடியும் என அவர் பெண் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றில் கடந்த காலங்களில் காணப்பட்ட தூரநோக்கற்ற கலாசாரம் மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.