சமூகத்தில் பரவும் போலி வாட்ஸ்அப் :பயனர்களுக்கு எச்சரிக்கை
இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் போலி வாட்ஸ்அப் குறித்து கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இது குறித்த ஒரு போலியான லிங்க் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் சமீபத்தில் வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.
மோசடி செய்பவர்கள் பலருக்கு இந்த இணைப்பை வாட்ஸ்அப் மூலமாகவே அனுப்புகிறார்கள். இந்நிலையில் பிங்க் வாட்ஸ்அப்புக்கான Link-ஐ கிளிக் செய்யவோ அல்லது பிங்க் வாட்ஸ்அப் ஆப்பை பதிவிறக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம்
இது மால்வேர்(malware) மென்பொருள். இதன் மூலம் உங்கள் தொலைபேசியை ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பைக் கிளிக் செய்பவர்களின் தொடர்பு எண்கள் மற்றும் சேமிக்கப்பட்ட படங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும்.
இதனால் நிதி இழக்கப்படலாம், ஸ்பேம் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் மற்றும் தொலைபேசி சாதனங்களின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழக்க நேரிடும்.
இதில் இருந்து விடுபட முதலில் செய்ய வேண்டியது, மொபைலில் பதிவிறக்கம் செய்த போலியான செயலியை உடனடியாக நீக்க (uninstall) வேண்டும்.
அதிகாரப்பூர்வ Google Play Store, iOS App Store அல்லது முறையான இணையதளங்களிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்யவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |