தங்க விசா திட்டம்: ரத்து செய்யும் பட்டியலில் இணையும் மற்றொரு நாடு
சமீப காலமாக சில நாடுகள் தங்க விசா திட்டத்தினை இரத்து செய்துள்ள நிலையில் தற்போது ஸ்பெயினும் (Spain) தங்க விசா திட்டத்தை முடிவுக்குக் கொண்வரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பணக்காரர்கள் பெருந்தொகை ஒன்றை முதலீடு செய்யும் நிலையில், அவர்களுக்கு சில நாடுகள் தங்க விசா என்னும் ஒரு விசா திட்டத்தினை வழங்கிவந்தன. எனினும், சமீப காலமாக சில நாடுகள் அந்த விசா திட்டத்தினை ரத்து செய்துவருகின்றன.
தங்க விசா திட்டம்
ஸ்பெயின் ரியல் எஸ்டேட்டில் குறைந்தபட்சம் 500,000 யூரோக்கள் முதலீடு செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத நாட்டவர்களுக்கு ஸ்பெயின் சிறப்பு உரிமம் ஒன்றை வழங்கிவந்தது.
அதன்படி, அவர்கள் ஸ்பெயினில் மூன்று ஆண்டுகள் வாழவும், பணி செய்யவும் அனுமதியளிக்கும் வகையில் அந்த திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டில் வரி செலுத்தும் மக்களுக்கு வீடுகள் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்பெயின் பிரதமரான Pedro Sanchez, இந்த தங்க விசா திட்டத்தை ரத்து செய்வதால், வீடு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு கிடைக்க உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |