இலங்கைப் பத்திரங்கள் மீதான மதிப்பீட்டை D ஆக குறைத்தது S&P குளோபல்
குளோபல் ரேட்டிங் முகவரமான S&P குளோபல், வட்டி மற்றும் அசல் கொடுப்பனவுகளைத் செலுத்தத் தவறியதை தொடர்ந்து, இலங்கைப் பத்திரங்கள் மீதான மதிப்பீட்டை D ஆகக் குறைத்துள்ளது.
இலங்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடன் பத்திரத்தை செலுத்தத் தவறியதுடன், தனியார் கடனாளிகளிடம் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைக் கொண்டிருந்தது.
மேலும், சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான நிதி நெருக்கடியுடன் போராடி வருகிறது.
இலங்கையின் வெளிநாட்டுப் பொதுக் கடன் முடக்கம் அரசாங்கத்தின் சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் மீதான வட்டி மற்றும் முதன்மைக் கடப்பாடுகளை செலுத்துவதைத் கட்டுப்படுத்தியுள்ளது.
சில வெளிநாட்டு நாணயக் கடமைகளில் தவறியிருக்கும் இலங்கை அரசாங்கம், பத்திரப்பதிவுகளை 30 நாட்களுக்குள் செலுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என்று S&P தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு நிறுவனம் இலங்கை மீதான அதன் 'SD' நீண்ட கால மற்றும் 'SD' குறுகிய கால வெளிநாட்டு நாணய இறையாண்மை மதிப்பீடுகளை உறுதிப்படுத்தியது, இலங்கைக்கான எதிர்மறை பார்வையை மீண்டும் வலியுறுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடனை மறுசீரமைக்க நாடு யோசித்து வருகிறது. 3 பில்லியன் டொலர் நிதியைப் பெறும் நம்பிக்கையில் ஆகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பிணை எடுப்புப் பேச்சுக்களை இலங்கை மீண்டும் தொடங்க உள்ளது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
