அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்களை 50 சதவீதமாக அதிகரித்த திட்டம்
எதிர்வரும் 15 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான நிறுவன வரிகள் மற்றும் சுங்க வரிகளை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவன வரி அதிகரிப்பு சதவீதம் குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிவேக நெடுஞ்சாலை கட்டணம்
எனினும் அதிவேக நெடுஞ்சாலையில் வசூலிக்கப்படும் கட்டணத்தை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்த மாதத்தில் வீட்டுத் திட்டங்களின் ஒப்புதலுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்களையும், ஏனைய சேவைகளை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் பல கட்டணங்களையும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்க வருமானம்
மொத்த தேசிய உற்பத்தியில் 65 சதவீததத்திலிருந்து 90 சதவீதம் வரை அரசாங்க வருமானத்தை உயர்த்துவதற்காகவே இந்த வரிகளும் கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன.
இதேவேளை, இலங்கையின் வாழ்க்கைச் செலவு வரி வருமானம் உட்பட அனைத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டதன் மூலம் அதிகளவான இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.