அரச இலக்கிய விருது பெற்ற இளம் ஆராய்ச்சியாளரால் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் பெருமிதம் அடைகிறது! றமீஸ் அபூபக்கர்
அரச இலக்கிய விருது பெற்ற இளம் ஆராய்ச்சியாளரால் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் பெருமிதம் அடைகிறது என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறையின் வரலாற்று பிரிவு விரிவுரையாளர் எச்.எப்.பிர்தெளசியா பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் 'சிறந்த மொழி பெயர்ப்பு புலைமைத்துவ ஆய்வுகள் இலக்கியத்துக்கான" விருதினை பெற்றுக்கொண்டார்.
இளம் பிறையும் இடைத்தராசும்
இவ்விருது அவரால் சிங்கள மொழிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட 'இளம் பிறையும் இடைத்தராசும்", "இலங்கை - அரேபியா தொடர்புகள் பற்றிய ஆய்வு" எனும் நூலுக்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதிக ஆராய்ச்சியாளர்களை உருவாக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகம் வெற்றியடைத்து வருவதுடன், எதிர்காலத்தில் பல மைல்கற்களை அடையும் என்று உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் விருது வென்ற விரிவுரையாளர் எச்.எப்.பிர்தெளசியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்
இன்னும் எதிர்காலத்தில் இது போன்ற பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்
அரச இலக்கிய விருது பெற்ற இளம் ஆராய்ச்சியாளரால் தென்கிழக்குப் பல்கலைக்கழக
சமூகம் பெருமிதம் அடைகிறது என்று தெரிவித்துள்ளார்.







ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
