இலங்கைப் பெண்கள் பற்றி பேசி பதவியிழந்த தென்கொரிய அரசியல்வாதி
மக்கள் தொகை சரிவை சமாளிக்க இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பெண்களை “இறக்குமதி” செய்யலாம் என்ற சர்ச்சையான கருத்தை வெளியிட்ட ஜிந்தோ கவுண்டி தலைவரை கட்சியிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளது.
தென் கொரியாவின் ஆளும் ஜனநாயகக் கட்சி (DP) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
தென் ஜியோல்லா மாகாணத்தின் ஜிந்தோ கவுண்டி தலைவரான கிம் ஹீ-சு மீது கட்சியின் உச்ச சபை ஏகமனதாக நீக்க தீர்மானம் எடுத்ததாக கட்சியின் பேச்சாளர் பார்க் சூ-ஹ்யுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை தென் ஜியோல்லாவில் நடைபெற்ற தொலைக்காட்சி நகர மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய கிம், கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்க “வியட்நாம் மற்றும் இலங்கையிலிருந்து இளம் பெண்களை இறக்குமதி செய்யலாம்” என்று கூறியிருந்தார்.
இந்தக் கருத்து பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியது. சர்ச்சை வெடித்த மறுநாளே கிம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார்.
கிராமப்புறங்களில் மக்கள் தொகை கடுமையாகக் குறைவதும், “திருமணத்தின் அடித்தளங்கள் பலவீனமடைதலும்” போன்ற கட்டமைப்பு சிக்கல்களை சுட்டிக்காட்டும் நோக்கில் தான் அந்தக் கருத்தை தெரிவித்ததாக அவர் கூறினார்.
மேலும், தென் ஜியோல்லா மாகாணமும் குவாங்ஜூ நகரமும் இணைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் முயற்சியாகவே அந்த உரை இடம்பெற்றதாகவும் அவர் விளக்கமளித்திருந்தார்.
எனினும், பெண்களை பொருளாகக் கருதி பேசும் வகையில் அமைந்த இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கருதிய ஆளும் கட்சி, கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையாக அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri