இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா
தென் கொரியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியான (கொரியா எக்ஸிம்பேங்க்), இலங்கையின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி சலுகைக் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்ப்பிப்பதற்கான அதன் முடிவை இலங்கையின் நிதி அமைச்சகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தென்கொரிய உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவும், இலங்கையும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்த பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம்
இலங்கையில், ருவன்வெல்ல நீர் வழங்கல் திட்டம் உட்பட ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை மீள ஆரம்பிக்க இந்த தீர்மானம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
இது நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் ஸ்திரப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முக்கிய முடிவின் மூலம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், பயன்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டங்கள், கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |