யாழில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களின் இசைநிகழ்ச்சியில் 40,000ற்கும் மேல் இலவச அனுமதி

Jaffna Northern Province of Sri Lanka Hariharan
By Dev Feb 08, 2024 07:59 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழில் பல தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள் இணைந்து நடத்தவுள்ள இசைநிகழ்ச்சியில் 40,000ற்கும் மேல் இலவச அனுமதி சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான இந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த இசைநிகழ்ச்சிக்கு பலரும் VIP அனுமதிக்கு எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் நீண்டகாலமாக பதிவு செய்தவர்கள் நின்றுகொண்டு இசை நிகழ்ச்சியை பார்க்கும் போது இலவசமாக VIP அனுமதியை வழங்கமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே விருப்பமுள்ளவர்கள் பணம் கொடுத்து VIP இருக்கையில் அமர்ந்து பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் VIPஅனுமதி மூலம் பெறுப்படும் பணம் முற்றிலும் கல்வி அறக்கட்டளைக்கே வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை (09.02.2024) ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஹரிகரன் மற்றும் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா, உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களின் இசைநிகழ்ச்சியில் 40,000ற்கும் மேல் இலவச அனுமதி | South Indian Stars In Jaffna

முதலாம் இணைப்பு

யாழ். மாநகரின் SLITT | Northernuni கல்வி நிறுவனத்தினால் தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் பங்குபெறும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சி, யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்ச்சியானது, எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். கல்வி மேம்பாட்டு நிதியம்

பல்லாயிரக்கணக்கானோர் இலவச பதிவுகளை மேற்கொள்வதால் இருக்கை பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக இருக்கைகளை ஒவ்வொரு பகுதிகளாக பிரித்து வரையறுக்கப்பட்ட ஆசனங்களுக்கான அனுமதிசீட்டுக்களை குறிப்பிட்ட தொகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களின் இசைநிகழ்ச்சியில் 40,000ற்கும் மேல் இலவச அனுமதி | South Indian Stars In Jaffna

மேலும், அனுமதிசீட்டுக்களின் மூலம் பெறப்படும் நிதியானது யாழ். கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு வழங்கப்படவுள்ளது.

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்தியாவின் ஒரு பிரபல நட்சத்திரம் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US