பாகிஸ்தானிய படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையில் மோதல்- எல்லையில் பதற்றம்!
பாகிஸ்தானிய படையினருக்கும் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதிகளுக்கும் இடையில் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிய எல்லைப்பகுதியில், பாகிஸ்தானிய படையினர், அத்துமீறி பிரவேசித்து தமது எல்லையை விரிவுப்படுத்தியதை அடு்த்தே இந்த மோதல் மூண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு நிமோஸ் மாகாணத்தில் இந்த சம்பவம் இந்த வாரத்துக்குள் இரண்டாவது தடவையாக நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானிய படையினர் குறித்த பகுதியில் எல்லையை விரிவுப்படுத்தி அமைத்திருந்த வேலியை ஆப்கானிஸ்தான் தாலிபான் தீவிரவாதப்படையினர் நாசம் செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 22ஆம் திகதியும் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இந்தநிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடரக்கூடாது என்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லை தொடர்பில் 1893ஆம் ஆண்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.











அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
