தென்னாபிரிக்காவின் உதவிக்கான உறுதியை பெற்ற ரணில்
இலங்கைக்கு உதவ தென்னாப்பிரிக்கா விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா, உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டுக்காக பாலி (இந்தோனேசியா) செல்லும் வழியில் இரண்டு முறை கொழும்புக்கு ஊடாக பயணம் செய்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஒட்டியுள்ள இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவருக்கு இரவு விருந்தளித்தார்.
இதன்போது அன்றைய தினம் ரமபோசாவின் பிறந்தநாள் என்பதால், ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் கேக், ரமபோசாசை ஆச்சர்யமடைய செய்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இலங்கைக்கு உதவி
இதில் முதலாவது துண்டை, அவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஊட்டிய பின்னர், ரணில் விக்ரமசிங்க தமது கோரிக்கையை முன்வைக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
இதன்போது, பொருளாதார மற்றும் கலாச்சார விவகாரங்களில் இலங்கைக்கு உதவ தென்னாபிரிக்க ஜனாதிபதி முன்வந்துள்ளார்.
அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு இலங்கைக்கு உதவி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, தமக்கு கிடைத்த இந்த ஜனாதிபதி பதவி வாய்ப்பை, தாம் பிரதமராக இருந்த காலத்தில் செய்த பணிகளை காட்டிலும், அதிகமாக செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில், அவர் அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவது மாத்திரமல்லாமல், வெளிநாட்டு தொடர்புகள் உட்பட்ட பல்வேறு விடயங்களிலும் மற்றவர்களைவ விட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்க ததரப்புக்கள் தெரிவிக்கின்றன.