இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென்னாபிரிக்கா உதவும்:நலேடி பாண்டோர் உறுதி
இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தென்னாபிரிக்கா உதவுமென அந்த நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டோர் தெரிவித்துள்ளார்.
அமைதி மற்றும் சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில்,இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதிநிதிகள் குழுவிடமே அமைச்சர் நலேடி பாண்டோர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கையின் அமைச்சர் குழு
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர்களை சந்திக்கும் நோக்கில் இலங்கையின் அமைச்சர் குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் இந்த விடயத்தில் கூடிய அறிவைக் கொண்ட ஜனாதிபதி சிறில்
ரமபோசாவுடன் அவர்கள் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதுடன் அரசியல் தலைவர்கள்
சிலரையும் சந்திக்கவுள்ளனர்.
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri