உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் ”ஒமிக்ரோன்” பரவியுள்ளதாக கூறும் தென்னாபிரிக்கா
”ஒமிக்ரோன்” ” வைரஸ் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்கனவே பரவியுள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.
50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா வைரசான”ஒமிக்ரோன்” தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை ”ஒமிக்ரோன்” வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்கா உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுடனான விமானப்போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.
எனினும் தமது நாட்டின் மீது ஏனைய உலக நாடுகள் பயணகட்டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு தென் ஆப்பிரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது
தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எதிர்பாராத ஒன்று மற்றும் நமது பொருளாதாரத்தையும் இது பாதிக்கும்.
எனவே தமது நாட்டின் மீது கட்டுப்பாடுகள் விதித்துள்ள நாடுகள் அறிவியலை பின்பற்றி முடிவுகளை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று தென்னாபிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் Joe Phaahla தெரிவித்துள்ளார்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா



