நாடளாவிய ரீதியில் இந்து ஆலயத்தில் சிறப்புற நடைபெற்ற சூரசம்கார நிகழ்வு (Photos)
தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும்.
இந்த விரதம் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று இறுதி நிகழ்வான சூரசம்கார நிகழ்வுகள் பல ஆலயங்களில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (30.10.22) முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.
முள்ளியவளை ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலயம்
முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வேலவர் கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று ஆலயத்தில் சிறப்புற நடைபெற்றது.
முருகப்பெருமானுக்கு விசேட அபிடேங்கள் இடம்பெற்று மங்கள வாத்தியம் முழங்க உள்வீதி வலம் வந்து பக்தர்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் கடாய் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த முருகப்பெருமான் சூரனைவதம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி கொடுத்தார்.
சிறப்பாக முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தில் இருந்து முருகனின் படைத்தளபதிகளான நவவீரர்கள் உடை அலங்காரத்துடன் நரதர் உள்ளிட்டவர்கள் முள்ளியவளை கல்யாணவேலவர் ஆலயத்தில் முருகனின் தளபதிகளாக வலம் வரும் காட்சி சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த வகையில் இவ்வாலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை ஸ்ரீ கல்யாணவேலவர் ஆலயத்தில் வருடம் தோறும் இளைஞர்களால் மிக சிறப்பாக சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகின்றமை குறிப்பிடதக்கது.
வவுனியா
வவுனியாவில் பிரசித்தி பெற்ற வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்கார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியாவின் சிறப்பு மிகு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் மேளதாள வாத்திய இசை முழங்க, அந்தணச் சிவாச்சாரியர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலயத்தில் இருந்து வெளி வீதிக்கு வந்த வந்த முருகப்பெருமான் மணிக்கூட்டு கோபுர சந்தி உள்ளடங்கிய ஏ9 வீதியில் சூரனுடன் போர் செய்து சூரனை வதம் செய்து பக்த அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
இதேவேளை, வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவில், நெளுக்குளம் முருகன் ஆலயம், கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம், பழனி முருகன் ஆலயம் உட்பட வவுனியா மாவட்டத்தில் உள்ள பல முருகன் ஆலயத்தில் சூரசம்காரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தாண்டிக்குளம் முருகன் ஆலயம்
வவுனியா தாண்டிக்குளம் முருகன் ஆலயத்தில் சூரசம்காரம் இடம்பெற்றது.
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றையதினம் வவுனியா தாண்டிக்குளம் முருகன்
ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரன்போர் நிகழ்வுகள் சிறப்பாக
இடம்பெற்றிருந்தது.
இதேவேளை வவுனியா கந்தசுவாமி கோவில், நெளுக்குளம் முருகன் ஆலயம் உட்பட வவுனியா மாவட்டத்தில் உள்ள பல முருகன் ஆலயத்தில் சூரசம்காரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
களுதாவளை
கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தி சூரன்போர் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
மூல மூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு பூஜைகள் இடம்பெற்றது.
சுவாமி உள்வீதி வலம் வந்ததைம் தொடர்ந்து முருகப்பபெருமான் மயில் வாகனத்தில் வெளிவீதியில் வலம்வர சூரபத்மன் கழுகு, யானை, உள்ளிட்ட, வெவ்வேறு முகங்களை மாற்றிக் கொண்டு முருகப்பெருமானுடன் போர் புரிந்தார்.
இறுதியில் முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிபுரிந்து சூரபத்மனைக் கொன்றார்.
சூரன் சேவலும், மயிலுமாக மீண்டும் உயிர் பிழைத்தார். இறுதியில் முருகப்பெருமான் சேவலைக் கொடியாகவும், மயிலை வாகனமாகவும் எடுத்துக் கொண்டார். இந்த காட்சியை ஆலயத்தில் மிகவும் விமர்சையாக நடந்தேறியது.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம்
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் நல்லையம்பதி அலங்காரக்கந்தன் தேவஸ்தானத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று மாலை சூரசம்காரம் பக்திபூர்வாக இடம்பெற்றது.
இவ் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான முருகன் ஆலயங்களிலும் மிக சிறப்பாக விரத உற்சவ அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
இவ் உற்சவ கிரியையினை ஆலயபிரதம குரு ஸ்ரீ வைகுந்தன் சிவாச்சாரியர்
நடத்திவைத்தார்.
ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்கள் மழையினையும் பொருட்படுத்தாது வழிபாடுகளில்
கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச் சென்றனர்.













ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
