ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் தீர்வு- செய்திகளின் தொகுப்பு
ஜோர்தானில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு ஜோர்தான் தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஜோர்தானுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள், அந்நாட்டு தொழில் அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் அண்மையில் கலந்துரையாடியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடு திரும்பும் எதிர்பார்ப்பிலுள்ள தொழிலாளர்களை கூடிய விரைவில் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |