சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் கிடைக்கவுள்ள தீர்வு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக சீமெந்து பொதிகளைத் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வரவுள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
டொலர் பிரச்சினை காரணமாக சீமெந்து இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டமையால் அண்மைக்காலமாக சீமெந்து தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது.
முன்னைய காலத்தை விடவும் தற்போது சீமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டு இலட்சம் சீமெந்து பொதிகளைத் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வரவுள்ளதாகவும் எனவே, எதிர்வரும் 22 ஆம் திகதியின் பின்னர் சீமெந்து தட்டுப்பாடு குறைவடையும் எனவும் கூறியுள்ளனர்.
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam