சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி...!
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (03.03.2023) அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சோனியா காந்தி வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை அறிக்கை
ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ். ராணா கூறுகையில், "காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு, மூத்த மருத்துவர் அருப் பாசு மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனியா காந்திக்கு தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
May you like this Video

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam

இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி: புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கபோகும் 5 ராசிகள் Manithan
