இந்திய அளவில் அதிகம் கேட்கப்படும் தமிழ்ப்பாடல்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள ஈழத் தமிழரின் பாடல்
ஈழத் தமிழரான ஷியமளாங்கன் இசையில் வெளியான ‘அன்பே’ இந்திய அளவில் spotifyஇல் அதிகம் கேட்கப்படும் தமிழ்ப்பாடல்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.
ஈர்ப்பான இசையையும் வசீகரமான வரிகளையும் கொண்ட இந்தப் பாடலில் பணியாற்றியது மகிழ்ச்சி தருகிறது என்று பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார் .
‘இசை அறிவு மிகுந்த இசையமைப்பாளரான ஷியாமளாங்கனோடு இணைந்து அழகான இந்தப் பாடலில் பணியாற்றியதையிட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று ஸ்ரீநிவாஸ் தனது முக நூல் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
சங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே முதலான முன்னணி இசைக்கலைஞர்களோடு இணைந்து வெற்றிப் படைப்புகள் பலவற்றைத் தந்தவர் ஷியாமளாங்கன்.
தற்போது வெளிவந்திருக்கும் ‘அன்பே’ பாடலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இலங்கையின் மிகப் பிரபலமான பாடல்களான ‘கிரி கோடு ஹிதட’, ‘பது பெம் பதும்’ முதலானவற்றுக்கு இசையமைத்தவர் ஷியாமளாங்கன் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தற்போது தமிழகத்தில் வெளியாகும் படங்களுக்கும் வெப்தொடர்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
‘காதலின் எல்லாப் பரிமாணங்களையும் உணர்த்தும் உயிர்ப்புள்ள வரிகளை மதுரன் தமிழவேள் எழுதியிருக்கிறார்’ என்று பாடலாசிரியரையும் சிலாகித்துப் பேசியிருக்கிறார் ஸ்ரீநிவாஸ்.
சந்தம் தப்பாமல் இசையோடு இழையோடும் வரிகளைப் பாவலர் மதுரன் தமிழவேள் எழுதியிருக்கிறார்.
‘தரைமீது இருகால்கள் பதியாமல் அலைகின்றேன் – புவியீர்ப்பின் கணிதங்கள் பிழையானதே’ என்ற மதுரன் தமிழவேளின்(தவ சஜிதரன்) வரி இணையத்தில் பரவலாகப் பாராட்டப் பட்டு வருகிறது.
இலங்கைத் தமிழர்கள் மீது எனக்குத் தனிப் பாசம் உண்டு’ என்றும் பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.
முக நூலில் கடந்த வாரம் வெளியிட்ட பதிவில் ‘நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் எனக்குத் தந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள், அவர்கள் மீது எனக்குத் தனிப்பிரியம் உண்டு’ என்று அவர் தெரிவித்துள்ளார்.





ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
