வெளிநாட்டிலிருந்து அனுப்பிய பணத்தில் வர்த்தகராக மாறிய மகன் - தாய்க்கு செய்த கொடுமை அம்பலம்
வெளிநாட்டில் இருந்து தாய் ஒருவர் உழைத்து அனுப்பி பணத்தை கொண்டு மகன் ஒருவர் பிரபல வர்த்தகராக மாறியுள்ளார்.
தேயிலை தோட்டம் ஒன்றை கொள்வனவு செய்த மகன் அந்தத் தோட்டத்தில் தனது தாயை பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தெல்தெனிய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அந்த தேயிலை தோட்டத்தில் கிடைக்கும் அனைத்து வருமானத்தையும் தனது மகன் பெற்றுக் கொண்டுள்ளார்.
தாயின் பணத்தில் தோட்டத்தை கொள்வனவு செய்த மகன், சிறு தொகை பணத்தை சம்பளமாக வழங்கியுள்ளார்.
குறித்த தாயின் மூத்த மகனான தேரர் , தாய்க்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கவலை வெளியிட்டுள்ளார்.
“நாள் ஒன்று 650 ரூபாய் மாத்திரமே அம்மாவுக்கு தம்பி ஊதியமாக வழங்கியுள்ளார். உணவு எதுவும் வழங்குவதில்லை.
இவ்வாறு மோசமாக செயற்பட வேண்டாம் என அவருக்கு பல முறை கூறியுள்ளேன். எனினும் தம்பி தொடர்ந்து அவ்வாறு செய்து வருகின்றார்.
அம்மாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இல்லை என்றால் நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போகின்றேன்” என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
