30 வருடங்களின் பின் இலங்கையில் பெற்றோரை தேடும் நோர்வேயில் வாழும் மகன்
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினால் தத்தெடுக்கப்பட்ட இலங்கை மகன் தற்போது இலங்கை பெற்றோரை தேடி வருகின்றார்.
நோர்வே நாட்டிற்கு சென்று அங்கு வளர்ந்த பின்னர் அதே நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 31 வயதான இளைஞன் நாட்டில் எங்காவது இருக்கும் தனது பெற்றோரை தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இளைஞன் தன்னை பெற்ற தாயின் புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். அந்த தகவலுக்கமைய தனது தாய் பலாங்கொடை வைத்தியசாலையில் பிறந்துள்ளதாகவும் தற்போது தாய்க்கு 49 வயதாகின்றது. இந்த குழந்தையை பெறும் போது தாய்க்கு 19 வயதாக இருக்கலாம்.
அவரது பெயர் களுபஹனகே சீதா ரஞ்சனி என மகன் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் தனது குழந்தையை பிரசவிப்பதற்காக அநுராதபுரம், புலியங்குளம், வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டார்.
1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அவர் அங்கு குழந்தை பிரசவித்துள்ளார். குழந்தைக்கு சமன் திஸாநாயக்க என பெயரிடப்பட்டுளளது.
பிறப்பு சான்றிதழில் அநுராதபுரம், மஹகடவல பிரிவு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது தந்தையின் பெயராக களுபஹனகே தெனேரிஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. தனது தாய் தந்தை தொடர்பில் தகவல் அறிந்தால், 0772114995 (என்ரூ சில்வா) என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
