தாயைக் காப்பாற்ற தந்தையை தாக்கிக் கொலை செய்த மகன்
16 வயது மகன் தாக்கியதில் படுகாயமடைந்த அவரது 46 வயது தந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பொலனறுவை - வேவதென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலனறுவைப் பொலிஸார் கைது
உயிரிழந்த நபர் மதுபோதையில் வந்து தனது மனைவியை இரும்புக் கம்பியால் தாக்குவதற்கு முற்பட்டபோது அவரின் மகனும் மகளும் தலையிட்டுத் தடுப்பதற்கு முயற்சித்த போது அவர்களையும் தாக்கியுள்ளதால் ஆத்திரமுற்ற மகன் தந்தையிடம் இருந்த இரும்புக் கம்பியைப் பறித்துத் தாக்கினார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பொலனறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைப் பொலனறுவைப் பொலிஸார் கைது
செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
