மாமியாரின் இறுதிச் சடங்கிற்கு சென்ற மருமகன் பரிதாபமாக மரணம்
பதுளையில் மனைவியின் தாயாரின் இறுதிக் கிரியைக்காக சென்ற இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மெதகம - மொனராகல வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பகினிகஹவெல பகுதியை சேர்ந்த 36 வயதான மதுசங்க சமிந்த குமார என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இளைஞன் மரணம்
விபத்தினால் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் தனது மனைவியின் தாயாரின் இறுதிக் கிரியைக்காக அப்பகுதிக்கு சென்றதாகவும், இறுதிச் சடங்கிற்கு தேவையான பொருட்கள் சிலவற்றை எடுத்து வருவதற்காக சென்ற வேளையில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri